பழனியில் பொதுமக்களின் நலன் கருதி போக்குவரத்துக்கு முன்னுரிமை அளிக்கும் காவல் துணை கண்காணிப் பாளர் தனஞ்செயன்
பழனியில் பொதுமக்களின் நலன் கருதி போக்குவரத்துக்கு முன்னுரிமை அளிக்கும் காவல் துணை கண்காணிப் பாளர் தனஞ்செயன்..
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் கடந்த சில தினங்களாக போக்குவரத்து நெரிசலால் பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகிவருகின்றனர் அதிலும் குறிப்பாக காந்தி மார்க்கெட் பகுதி வெளியூரில் இருந்து வரும் வாகனங்களுக்கு கூகுள் மேப் கருவியில் பொள்ளாச்சி கோவை செல்லும் வாகனங்களுக்கான வழி அங்கே கட்டப்படுகிறது இதனை தடுத்து வாகன போக்குவரத்தை தடுக்கும் விதமாக வேல் ரவுண்டுனா முன்பு வழிகாட்டி பலகையும் மேலும் விரைவில் கனரக வாகன நுழைவு நேரம் இரவு 8 முதல் காலை 6 வரை மாற்ற உள்ளதாக தகவல் கிடைக்கப்பட்டுள்ளது மேலும் ரயில்வே ரோடு பகுதியில் அதே போன்று வாகனங்கள் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் வாகனம் நிறுத்தினால் வாகனத்தை லாக் செய்யும் முறை தற்பொழுது நடைமுறைக்கு வந்துள்ளது. மற்றும் கிரிவீதி பகுதியில் வாகனத்தை நிறுத்தும் நபர்களை கண்காணிக்க 24 மணிநேரமும் காவலர்களை எடுப்படுத்தியுள்ளார்.
✍️ பழனி பாலமுருகன்