ஊர் பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை
ஊர் பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை..
Village public and social activists demand
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டம் காயம்பட்டு ஊராட்சியில் குடி கொண்டிருக்கும் மாபெரும் சக்தி வாய்ந்த ஸ்ரீ சக்தி மாரியம்மன் அமைந்துள்ளது. இந்த மாரியம்மன் கோவில் சில வருடங்களாகவே அவல நிலையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சுற்றுச்சுவரை அமைத்து, தரை போட்டுத் தருவதாக இரண்டு வருடமாக காலதாமதம் செய்து வருகின்றனர். ஊர் பொதுமக்களும் பக்தர்களும் கோவில் உள்ளே சாமி கும்பிடும் வரும்பொழுது உள்ளே செடியும் புல்லும் பூண்டுமாக அமைந்திருப்பதைக் கண்டு மிகவும் மன வேதனை அடைகின்றனர். இதை கண்டு கொள்ளாது இருக்கும் செங்கம் அறநிலைத்துறை அதிகாரிகள் மற்றும் ஊர் நாட்டார்கள். இதை உடனடியாகச் சரி செய்து தருமாறு ஊர் பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விஜிலென்ஸ் டிவிக்காக நமது செய்தியாளர் செங்கம் ராஜா