காட்டுப்பன்றி தாக்கி ஒருவர் உயிரிழப்பு
காட்டுப்பன்றி தாக்கி ஒருவர் உயிரிழப்பு..
நீலகிரி மாவட்டம், கோத்தகிரி ஜக்கனாரை, வாட்டர்பால்ஸ் நகரில் வசிக்கும் செல்லம்மாள் (வயது சுமார் 70) என்பவர் காட்டுப்பன்றி தாக்கியதில், உயிரிழந்து விட்டதாக கூறப்படுகிறது.
உயிரழந்த செல்லம்மாளின் பிரேதம், இன்று (02.08.25) கோத்தகிரி அரசு மருத்துவமனையில் உடற்கூராய்வு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
நீலகிரி மாவட்ட வன அலுவலர் கௌதம் I.F. S. உத்தரவின் பேரில் , வனத்துறை சார்பாக உடனடி நிவாரணத் தொகை ₹.50,000/- க்கான காசோலையை, கோத்தகிரி வனச்சரக அலுவலர் செல்வராஜ் தலைமையிலான குழுவினர் வழங்கியதாக கூறப்படுகிறது.
தமிழ்நாடு சிறப்பு ஆசிரியர்
சிவகிருஷ்ணா.