நெல்லையில் காவலர்கள் கவனத்தை ஈர்த்த மணிவண்ணன் IPS,DIG க்கு குவியும் பாராட்டு மழை..

நெல்லையில் காவலர்கள் கவனத்தை ஈர்த்த மணிவண்ணன் IPS,DIG க்கு. குவியும் பாராட்டு மழை..

Manivannan IPS, DIG who attracted the attention of the police in Nellai. A shower of praise is pouring in..

நெல்லையில் காவலர்கள் கவனத்தை ஈர்த்த மணிவண்ணன் IPS,DIG க்கு. குவியும் பாராட்டு மழை..

“உங்களுடன் நான் இருக்கிறேன்” – நெல்லை போலீசாரை நெகிழ வைத்த கமிஷனர் : பிறந்தநாளில் சோஷியல் மீடியாவில் சர்ப்ரைஸ் வாழ்த்து!

நெல்லை மாநகர போலீசாரின் பணிச்சுமையைக் குறைத்து அவர்களை உற்சாகப்படுத்தும் வகையில் பிறந்தநாளன்று சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவிப்பதோடு, விடுப்பு அளிக்கும் புதிய திட்டத்தை கமிஷனர் மணிவண்ணன் தொடங்கி வைத்தார்.

சென்னை, திருச்சி, மதுரை வரிசையில் நெல்லை மாநகர போலீசாருக்கும் பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்கும் புதிய நடைமுறையை கமிஷனர் மணிவண்ணன் அமல்படுத்தியுள்ளார். நெல்லை மாநகர போலீஸ் கமிஷனராக பொறுப்பேற்றது முதல் போலீசாரின் நலனில் அக்கறை செலுத்தி வரும் கமிஷனர் மணிவண்ணன், தற்போது புதிய முயற்சியாக இந்தத் திட்டத்தை கையில் எடுத்துள்ளார். பணிச்சுமைக்கு இடையே போலீசாரை உற்சாகப்படுத்தும் விதமாக, அவர்களது பிறந்தநாளன்று கமிஷனரின் பிரத்யேக வாழ்த்துச் செய்தி மாநகர போலீசாரின் அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கங்களில் பதிவிட உத்தரவிட்டுள்ளார். இந்தத் திட்டத்தினை அமுல் படுத்திய உடன் பிறந்தநாள் கொண்டாடும் தலைமை காவலர் தாம்சன் மற்றும் இரண்டாம் நிலைக்காவலர் மந்திரமூர்த்தி ஆகியோருக்கு கமிஷனர் மணிவண்ணன் பெயரிடப்பட்ட வாழ்த்து செய்தி சமூக வலைதளத்தில் வெளியிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த வாழ்த்து செய்தியில், ‘உங்களுடன் நான் இருக்கிறேன், சிறப்பாக பணியாற்றுங்கள்’ என குறிப்பிடப்பட்டிருந்தது போலீசாரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இதுகுறித்து மாநகர போலீஸ் கமிஷனர் மணிவண்ணன் கூறுகையில், மாநகர போலீஸ் என்பது நான் ஒருவன் மட்டுமல்ல. இங்கு பணியில் இருக்கும் ஒவ்வொரு போலீசாரும் சேர்ந்துதான் மாநகர போலீஸ் துறை. அவர்கள் சிறப்பாக செயல்பட்டால் தான் நெல்லை மாநகர போலீஸ் துறையும் சிறப்பாகச் செயல்படும். அதனால் அவர்களை உற்சாகப்படுத்தும் விதமாக அவர்களது பிறந்தநாளின் போது உங்களுடன் நான் இருக்கிறேன் என்ற வாசகத்துடன் சமூக வலைதளங்களில் வாழ்த்து செய்தி தெரிவிக்க உத்தரவிட்டு இருக்கிறேன் என்றார்.
மேலும் பிறந்தநாள் அன்று பணியில் உள்ள போலீசாருக்கு விடுப்பு அளிக்கப்படும் எனவும் கமிஷனர் அறிவித்துள்ளார். குடும்பத்துடன் அவர்கள் பிறந்தநாளை கொண்டாட இது ஒரு வாய்ப்பாக அமைவதோடு, தொடர்ந்து அவர்கள் உற்சாகமாக போலீஸ் பணியில் ஈடுபட இது உதவும் எனவும் அவர் தெரிவித்தார். கமிஷனரின் இந்த புதிய முன்னெடுப்பிற்கு நெல்லை மாநகர போலீசார் மற்றும் பொதுமக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

✍️ நிறுவனர்/ வெளியீட்டாளர்/ ஆசிரியர்
விஜிலென்ஸ் டாக்டர் ஆனந்தன் துரைராஜ்

 

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *