Comprehensive road safety awareness program for Sairam Engineering College bus drivers.
Comprehensive road safety awareness program
for Sairam Engineering College bus drivers.
சாய்ராம் பொறியியல் கல்லூரி பேருந்து ஓட்டுநர்களுக்கான விரிவான சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
சாய்ராம் பொறியியல் கல்லூரியின் 252 பேருந்து ஓட்டுநர்களுக்காக விரிவான சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி, தாம்பரம் போக்குவரத்துத் துணை ஆணையர் டாக்டர் கே. பிரபாகர், IPS தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் கல்லூரி இயக்குநர் பழனியாண்டி, கல்லூரி முதல்வர் ஜே. ராஜா, தாம்பரம் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் (RTO) வெங்கடேஷன் ஆகியோர் கலந்துகொண்டு, சாலைப் பாதுகாப்பு விதிகளை கடைப்பிடிப்பதன் அவசியம், பொறுப்பான வாகன ஓட்டம், மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நடைமுறைகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இந்த நிகழ்ச்சி, பேருந்து ஓட்டுநர்களிடையே சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை மேலும் வலுப்படுத்தி, மாணவர்களின் பாதுகாப்பான பயணத்தை உறுதிசெய்யும் வகையில் மிகவும் பயனுள்ளதாக அமைந்தது.


✍️ தலைமை நிருபர் சென்னை வினோத் குமார்
