தன்னுடைய இளம் வயதில் இருந்தே பொதுமக்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளைத் தீர்த்து வைக்க வேண்டும், நலிவடைந்த மக்களுக்கு தன்னால் முடிந்த உதவிகளைச் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தோடு வளர்ந்தவர். அன்னை தெரேசா அவர்களின் வழியில் நடப்பவர்.
மக்கள் டிவி, தமிழ் ஓசை, தராசு பத்திரிகை, தங்கக் கழுகு போன்ற பத்திரிகைகளில் உதவி ஆசிரியராகப் பணிபுரிந்துள்ளார்.
இவர் 2007 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 23ஆம் தேதி மக்கள் டிவியில் பணிபுரிகையில் தஞ்சை மாவட்டம் திருவையாற்றைச் சேர்ந்த புலவர் மு. பாலகிருட்டிணன் / சுசிலா
பாலகிருட்டிணன் ஆகியோரின் கடைமகள் பா.தமிழ் பாரதி என்பவரை மணந்தார். இவருடைய மனைவி இளங்கலை கணிதவியல் படித்துள்ளார். இவர்கள் இருவருக்கும் திருமணம் ஆன பின் தன் மனைவியை முதுநிலை மனித உரிமைகள் படிப்பை படிக்க வைத்து, அதே துறையில் முனைவர் பட்டமும் பெறச் செய்தார். அதோடு மட்டுமல்லாமல் கணிப்பொறி அறிவியலையும் பயிலச்செய்தார். ஆனந்தன் தமிழ் பாரதி தம்பதியர்களுக்கு ஒரு ஆண் மகன், ஒரு பெண் மகள் உள்ளனர். மகன் கிருஷ்ணன் ஆனந்தன் அவர்கள் பத்தாம் வகுப்பு பயின்று வருகிறார்கள். துஜிதா ஆனந்தன் அவர்கள் ஏழாம் வகுப்பு பயின்று வருகிறார்கள்.
தன்னுடைய இத்தனை கால அனுபவத்தை வைத்து 2012 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி நமது விஜிலென்ஸ் அரசியல் மற்றும் புலனாய்வு இதழ் என்ற மாத இதழை அப்போதைய மீன்வளத் துறை அமைச்சர் K.A.ஜெயபால் அவர்களின் பொற்கரங்களால் கொண்டு வந்தார். அன்று முதல் இன்று வரை நமது விஜிலென்ஸ் இதழ் வெற்றி நடை போட்டு வருகிறது. “அஞ்சுவது யாதொன்றும் இல்லை ஆண்டவனைத் தவிர” என்ற தாரக மந்திரத்தோடு நமது விஜிலென்ஸ் இதழை விஜிலென்ஸ் DR.D.ஆனந்தன் துரைராஜ் அவர்கள் உயர்ந்த கொள்கையும், சமுதாய நோக்கமும், மனித நலனில் நாட்டமும், நாட்டு முன்னேற்றத்தில் மிகுந்த ஈடுபாடும், மற்றவர்களிடமிருந்து மாறுபட்ட சிந்தனை போக்கும், புதியன படைக்கும் வேட்கையும், படைப்பு ஆற்றலும், பத்திரிகையில் பணியாற்றும் அனைவரையும் ஒருங்கிணைந்து செயல்படும் திறமை மிக்கவராகவும், பொறுப்புணர்வுடனும், மக்கள் நல நாட்டம் உள்ளவராகவும், மனிதநேயம் மிக்கவராகவும், மக்களுக்கு நன்மை பயக்கக்கூடிய விஷயங்களை உடனே தீர்மானிக்கும் கூர்மையான அறிவு படைத்தவராகவும், தனக்கு கீழ் பணிபுரியும் ஏனையோரிடம் சுமூகமான உறவு வைத்திருப்பதும், அதிகாரத்தை விட அன்பின் மூலம் பணிகளைச் சிறப்பாகச் செய்யும்படி அனைவரையும் பார்த்துக் கொள்வதும், எப்பொழுதும் மன உறுதியுடன் செயல்படுவதும், பொதுமக்களின் கருத்து, தலைவர்களின் கருத்து என்னவென்று ஆராய்ந்து அறிந்து செயல்படுவதும், எந்த சூழ்நிலையிலும் மனசாட்சிப்படி பணியாற்றுபவராகவும், உண்மை, நேர்மை, கடமை, கண்ணியம், கட்டுப்பாடு, விடாமுயற்சி, எதற்கும் அஞ்சாமை என இப்படிப்பட்ட பல்வேறுபட்ட திறமைகளையும், கொள்கைகளையும் கொண்டு சிறப்பாக நமது விஜிலென்ஸ் இதழை நடத்தி வருகிறார் என்றால் அது மிகையல்ல..
அரசியல், கல்வி, சினிமா, விளையாட்டு, ஆன்மீகம், தொழில்நுட்பம், வர்த்தகம், மருத்துவம், வானிலை, உலகச் செய்திகள் என பல்வேறு பிரிவுகளையும் கொண்டு தமிழ்நாடு, பாண்டிச்சேரி, கேரளா, கர்நாடகா, புதுடெல்லி ஆகிய மாநிலங்களில் வெற்றி நடைப் போட்டு வருகிறது நமது விஜிலென்ஸ் இதழ்…
விஜிலென்ஸ் DR.D.ஆனந்தன் அவர்கள் நமது விஜிலென்ஸ் இதழைத் தொடர்ந்து விஜிலென்ஸ் டிவி என்ற இணையதள சேனலும் நடத்தி வருகிறார். விஜிலென்ஸ் மக்கள் இயக்கம் என்ற இயக்கத்தையும் நடத்தி வருகிறார்.. மக்கள் தங்கள் அடிப்படை உரிமைகளைப் பெற்றிடவும், மக்களுக்குச் சேவை ஆற்றிடவும், சேவையையே நோக்கமாக கொண்டு உருவாக்கப்பட்ட இயக்கமே இந்த விஜிலென்ஸ் மக்கள் இயக்கம் ஆகும்.
விஜிலென்ஸ் டாக்டர் D. ஆனந்தன் துரைராஜ் அவர்களின் பத்திரிக்கை பணியையும், மக்கள் பணியையும் பார்த்து பல்வேறுபட்ட அமைப்புகள் இயக்கங்கள் இவருக்கு பற்பல விருதுகளையும், பட்டங்களையும், சான்றிதழ்களையும் கொடுத்துள்ளார்கள்.. அம்பாசடர், நவீன பத்திரிகை உலகின் தந்தை, வித்தகன், சாதனைத் தமிழன், சேவா ரத்னா, சேவை செம்மல், சேவை இமயம், சேவை சிகரம், கலைத்திலகம், தங்கமகன், அன்னை தெரேசா விருது, அப்துல் கலாம் விருது, காமராசர் விருது, அம்பேத்கர் விருது, MGR விருது, ஸ்டாலின் விருது என பல்வேறுபட்ட விருதுகளையும் சான்றிதழ்களையும் பெற்றுள்ளார். அதோடு மட்டுமல்லாமல் சிறந்த பத்திரிக்கை ஆசிரியர் என்பதற்காக விருதும், இரண்டு முறை கௌரவ முனைவர் பட்டம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதே போல் மகளிர் தினம் அன்று விஜிலென்ஸ் மகளிர் தின விழாவும் நடத்தப்பட்டுள்ளது. இவ்விழாவில் சாதனைப் புரிந்த மகளிர்க்கு விருதுகளும் வழங்கப்பட்டது.
அனைத்து நிகழ்ச்சிகளிலும் பல்வேறுபட்ட துறைகளில் சாதனை புரிந்தவர்களைத் தேர்ந்தெடுத்து விஜிலென்ஸ் விருதுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது. அதேபோல் நலிவடைந்த மக்களுக்கு பல்வேறுபட்ட நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டது. பெண்களுக்கு இலவச தையல் மிஷின்களும், ஆண்களுக்கு இலவச இஸ்திரி பெட்டிகள், கை கால் இழந்தவர்களுக்கு செயற்கை கை கால்கள் வழங்கப் பட்டுள்ளது. டீ கடை பாய்லர்கள், மாற்றுத் திறனாளிகளுக்கு மூன்று சக்கர சைக்கிள்களும், உழைப்பால் உழைக்கத் துடிப்பவர்களுக்கு நான்கு சக்கர தள்ளுவண்டிகளும், பத்தாம் வகுப்பு, பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு உதவித் தொகை அளித்தல், மாணவர்களுக்கு இலவச நோட்டு புத்தகங்கள் வழங்குதல், திருநங்கைகளுக்கு உதவுதல், நலிவடைந்த குடும்பத்திற்கு ஒரு மாதத்திற்கு உண்டான மளிகை சாமான்கள் மற்றும் அரிசி மூட்டை வழங்குதல், நலிந்த பத்திரிகையாளர்களுக்கு உதவிகள், பெண்களுக்கு இலவச சேலைகள், பத்திரிகை நிருபர்களுக்கு ஹெல்மெட்டுகள், ரெயின் கோட்டுகள், டிராவல் பேக்குகள், மற்றும் இலவச மரக்கன்றுகள் என பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார்கள்..
Copyright © Vijilence Network. | All Rights Reserved.
Hosted by Webspiron