விவசாயிகளையும் பயிர்களையும் நாசம் செய்த கருப்பன் யானை
விவசாயிகளையும் பயிர்களையும் நாசம் செய்த கருப்பன் யானை
சத்தியமங்கலம் அடுத்த தாளவாடியில் இரண்டு விவசாயிகளை வேட்டையாடியும், விவசாய பயிர்களை நாசம் செய்து வந்த கருப்பன் என்று பெயர் வைக்கப்பட்ட யானை இன்று பிடிபட்டது. தாளவாடி ரேஞ்சர் சதீஷ் மற்றும் சீரகல்லி ரேஞ்சர் ராமலிங்கம் அவர்களின் தலைமையில் குழு அமைத்து கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக போராடி மயக்க ஊசி செலுத்தியும், கும்கி யானைகளின் உதவியுடனும் கருப்பனை பிடித்தனர். அதனால் பொதுமக்களும் விவசாய பெருமக்களும் பெருத்த மகிழ்ச்சி கொண்டாட்டத்தில் வனத்துறையினருக்கு நன்றி தெரிவித்தனர்.
✍️ பவானிசாகர் குமார்