எலிமெண்டரி ஸ்கூலில் முறைகேடு
எலிமெண்டரி ஸ்கூலில் முறைகேடு
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் தாலுகா காசிபாளையம் ஒன்றியத்துக்கு உட்பட்ட இந்திரா நகரில் உள்ள ஊரகத் தொடக்கப்பள்ளியில் காலை உணவு திட்டம் வழங்கப்படுகிறது. அதில் நியமிக்கப்படும் பணியாளர்கள் நியமனத்தில் முறைகேடு நடந்ததாக கூறி அதே பகுதியைச் சேர்ந்த வாட்ச் செயலாளர்கள் ராஜீவ் காந்தி மற்றும் வீரமணி ஆகியோர்களைக் கண்டித்து பொதுமக்கள் பள்ளி குழந்தைகளைப் பள்ளிகளுக்கு அனுப்பாமல் புறக்கணித்தனர். இதைத் தொடர்ந்து கோபி தாலுகா வட்டாட்சியர் மற்றும் மாவட்ட ஆட்சியர் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர்….
✍️ பெருந்துறை கார்த்திகேயன்