ஈரோடு மாவட்ட ஆட்சித் தலைவரின் உத்தரவு..
ஈரோடு மாவட்ட ஆட்சித் தலைவரின் உத்தரவு..
தமிழக அரசின் ஆணைக்கிணங்கவும், ஈரோடு மாவட்ட ஆட்சித் தலைவரின் உத்தரவின் பேரிலும், சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியம், கொமாரபாளையம் ஊராட்சியில் கலைஞரின் கனவு இல்லம் பயனாளிகள் தேர்வு செய்வது சம்பந்தமாகவும், பழைய தொகுப்பு வீடுகள் பழுது பார்ப்பது சம்பந்தமாகவும், சிறப்பு கிராம சபா நடைபெற்றது. கூட்டத்திற்கு கொமாரபாளையம் ஊராட்சி மன்றத் தலைவர் எஸ்.எம்.சரவணன் தலைமை ஏற்றார்,, சத்தியமங்கலம் வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) சரவணன், , கூட்டத்தில் கலைஞர் கனவு இல்லத் திட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட தகுதி உள்ள 32 பயனாளிகள் புதிதாக வீடு கட்டுவதற்கும், ஏற்கனவே கட்டப்பட்ட பழைய தொகுப்பு வீடுகளுக்கு பழுதுபார்த்தல் பணிக்கு 47 பயனாளிகளின் பெயர்கள் வாசிக்கப்பட்டு கிராம சபாவில் அங்கீகரிக்கப்பட்டது. ஊராட்சிப் பகுதியில் கள்ளச்சாராயம் பற்றிய விழிப்புணர்வை சத்தியமங்கலம் காவல் துறை மூலமாக
எடுத்துரைக்கப்பட்டது. முடிவில் வருகைப் புரிந்த அனைவருக்கும் ஊராட்சி செயலாளர் சர்வேஸ்வரன் நன்றியுரை ஆற்றினார்.
✍️ கோபி குமார்