நீண்ட நாட்கள் ஓய்வெடுக்கும் ஒரு கிராம பலகை..
நீண்ட நாட்கள் ஓய்வெடுக்கும் ஒரு கிராம பலகை.
நீலகிரி மாவட்டம் உதகையில், வெகு நாட்களாக ஓய்வு எடுக்கும் ஒரு கிராமத்தின் பெயர் பலகை :
நீண்ட காலமாக, நின்று கொண்டிருந்ததனால், சற்று ஓய்வெடுப்பதற்காக, கீழே படுத்துக் கொண்டிருக்கிறது என பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கூறுகின்றனர். பல நாட்களாக, அந்தப் பெயர் பலகை கீழே கிடப்பதை, யாரும் கண்டுகொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது.எ னவே சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலை துறையானது, அந்தப் பெயர் பலகையை சற்று எழுப்பி விட்டு, சரியான முறையில் நிமிர்ந்து நிற்க வைத்தால், அது பொதுமக்களுக்கு மிகவும் பயன்படும் என கூறப்படுகிறது.
முக்கிய குறிப்பு :
மேலும் இந்த பஞ்சாயத்திற்கு உட்பட்ட கிராமங்களில், தேவையான பல அடிப்படை வசதிகள் சரியாக செய்து கொடுக்கவில்லை எனவும், செய்யும் வேலை அரைகுறையாக தான் கிடப்பில் போடப்படுகிறது எனவும் கூறப்படுகிறது.
இதைப் பற்றிய முழு விபரம், அடுத்து வரும் நமது விஜிலென்ஸ் இதழில்..
– ✍️ நீலகிரி சிவகிருஷ்ணா.