Vijilence Network

Vijilence News

லாரி ஒன்று மின்சார வயர்கள் மீது உரசி வயர்கள் நடு ரோட்டில் விழுந்தது..

லாரி ஒன்று மின்சார வயர்கள் மீது உரசி வயர்கள் நடு ரோட்டில் விழுந்தது..

 

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி TO மேட்டுப்பாளையம் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த லாரியானது, Aravenu
SILVER TIP CAFE அருகே, இருந்த வீட்டின் மின்சார வயர்கள் மீது உரசி, மின் வயர்கள் நடுரோட்டில் விழுந்தன. சம்பந்தப்பட்ட லாரி நிற்காமல் சென்றது.நடுரோட்டில் பவர் சப்ளையுடன் வயர்கள் கிடந்தன. உடனடியாக நமது விஜிலென்ஸ் பத்திரிக்கை சார்பாக, கோத்தகிரி மின் வாரிய அதிகாரி சகோதரர் அணில்குமார் A. E. அவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் துரித நடவடிக்கை எடுத்து, மின் ஊழியர்களை சம்பவ இடத்திற்கு அனுப்பி, தற்காலிகமாக அதை சரி செய்து, இனி எந்த அசம்பாவிதம் நடக்காதவாறு அடுத்தகட்ட பாதுகாப்பு நடவடிக்கை செய்து கொடுப்பதாக உறுதியளித்தார்.

சரியான நேரத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டதால், பெறும் அசம்பாவிதம் தடுக்கப்பட்டது. எனவே A. E. அணில் குமார் அவர்களுக்கு, விஜிலென்ஸ் பத்திரிகை சார்பாகவும், பொதுமக்கள் சார்பாகவும், வாகன ஓட்டிகள் சார்பாகவும், மனதார நன்றியையும், பாராட்டையும் தெரிவிக்கின்றோம்.

✍️   நீலகிரி சிவகிருஷ்ணா.

 

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *