2 உலோக சிலைகள், 1 உலோக உடைவாள் மீட்ட சென்னை சிலை திருட்டு தடுப்பு பிரிவு..
2 உலோக சிலைகள், 1 உலோக உடைவாள் மீட்ட சென்னை சிலை திருட்டு தடுப்பு பிரிவு..
2 metal idols, 1 metal knife recovered by Chennai Idol Wing Unit..
சென்னை அடையாறு சாஸ்திரி நகரில் குடியிருக்கும் சுமதி பிரகாஷ் என்பவர் வீட்டில் சிலைகள் சந்தேகத்திற்கு இடமான முறையில் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக சென்னை சிலை திருட்டு தடுப்பு பிரிவுக்கு கிடைத்த தகவலின் படி சிலை திருட்டு தடுப்பு பிரிவு தலைமையக காவல் ஆய்வாளரும், தனிப்படையினரும் உடனே விரைந்து சென்று மேற்கண்ட இடத்தில் சோதனை நடத்தினார்கள். அங்கு நாகாத்தம்மன் உலோக சிலையும், உலோக உடைவாள் ஒன்றும் இருந்தன. இதுகுறித்து சுமதியிடம் விசாரித்ததில் சென்னை முகப்பேரைச் சேர்ந்த கலியமூர்த்தி, தங்கராஜ் மற்றும் சேலம் மாவட்டம் கொங்கணாபுரத்தைச் சேர்ந்த ராஜேஷ் கண்ணன் ஆகிய மூவரும் மேற்கண்ட சிலைகள் ஒரு கோவிலில் இருந்து திருடப்பட்டதாகவும் மிகவும் சக்தி வாய்ந்தது என்று சொன்னதாகவும், இந்த சிலைகளைப் பாதுகாப்பாக வைத்திருந்தால் சரியான நேரத்தில் கோடிக்கணக்கான ரூபாய்க்கு விற்கலாம் என்று உறுதி அளித்ததாகவும் தெரிவித்தார். சுமதியும் அவரது கணவர் பிரகாசும் சிலை குறித்து எந்த ஆவணங்களையும் முகாந்திரத்தையும் சமர்ப்பிக்காத காரணத்தினால் மேற்கண்ட சிலைகள் தனிப் படையினரால் கைப்பற்றப்பட்டு, சிலை திருட்டு தடுப்பு பிரிவினர் இவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து சுமதி மற்றும் பிரகாஷ் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அளித்த தகவலின் பேரில் முகப்பேரை சேர்ந்த கலியமூர்த்தி, தங்கராஜ் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டார்கள். இதில் தங்கராஜிடமிருந்து மேலும் மற்றொரு அம்மன் சிலை கைப்பற்றப்பட்டது. மேற்படி நான்கு நபர்களும் எழும்பூர் பெருநகர தலைமை குற்றவியல் நடுவர் முன்னணியில் ஆஜர் படுத்தப்பட்டு சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கில் மேலும் சம்பந்தப்பட்ட ஒருவர் சேலம் மாவட்டம் கொங்கணாபுரத்தைச் சேர்ந்த ராஜேஷ் கண்ணன் என்பவர் சிலை திருட்டு வழக்கில் ஏற்கனவே கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே சிறையில் உள்ள இவரை நீதிமன்ற காவலில் எடுத்து விசாரிக்க உள்ளனர். மேலும் இந்த சிலைகள் எந்த கோவிலில் இருந்து எடுக்கப்பட்டன இதில் மேலும் யார் யாரெல்லாம் சம்பந்தப் பட்டிருக்கிறார்கள் என்பதைப் பற்றி புலன் விசாரணை தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
✍️ விஜிலென்ஸ் DR.பா.தமிழ் பாரதி ஆனந்தன்
இணை ஆசிரியர்