20 சவரன் நகைகளை கொள்ளையடித்த மூன்று நபர்களை அதிரடியாக கைது செய்த பழனி காவல்துறையினர்..
20 சவரன் நகைகளை கொள்ளையடித்த மூன்று நபர்களை அதிரடியாக கைது செய்த பழனி காவல்துறையினர்..
பழனி அருகே வீட்டின் பூட்டை உடைத்து 20 சவரன் நகைகளை கொள்ளையடித்த வழக்கில் அதிரடியாக 3 பேரை கைது செய்து சிறையில் அடைத்த பழனி காவல் துறையினர்
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே சாமிநாதபுரத்தை சேர்ந்த தர்மராஜ் என்பவர் வீட்டை கடந்த சில நாட்களுக்கு முன்பு மர்ம நபர்கள் வீட்டின் கதவின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் நகை திருடி சென்றது தொடர்பாக பழனி காவல் துணை கண்காணிப்பாளர் தனஞ்ஜெயன் உத்தரவுபடி பழனி தாலுகா காவல் ஆய்வாளர் தென்னரசு தலைமையில் சாமிநாதபுரம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை தேடிவந்தனர்
இந்நிலையில் தமிழகம் முழுவதும் 64க்கும் மேற்பட்ட வழக்கில் தொடர்புடைய சென்னையைச் சேர்ந்த விஜயகுமார், தஞ்சாவூரைச் சேர்ந்த அஜய் பிரவீன் , திருச்சியை சேர்ந்த யாழின் ராஜ் ஆகிய 3 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மேலும் பல வழக்குகளில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியை பழனி தாலுகா ஆய்வாளர் தென்னரசு தலைமையில் போலீசார், சார்பு ஆய்வாளர்கள் மற்றும் கிரைம் போலீசார் ஆகியோர் இணைந்து கண்டுபிடித்துள்ளனர். யாராலும் பிடிக்க முடியாத முக்கிய குற்றவாளியை பிடித்த காவல்துறையினருக்கு பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பாராட்டுக்களைத் தெரிவித்து கொண்டனர்.
✍️ பழனி பாலமுருகன்