எனக்கும் வேண்டாம் நமக்கும் வேண்டாம்
எனக்கும் வேண்டாம்.. நமக்கும் வேண்டாம்..
எனக்கும் வேண்டாம் நமக்கும் வேண்டாம் என்ற முழக்கத்துடன் சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு பழனி காவல் துணை கண் காணிப்பாளர் தலைமையில் மற்றும் மாணவர்களின் விழிப்புணர்வு. பேரணி நடைபெற்றது..
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் போதை பொருள் இல்லாத மாவட்டமாக உருவாக்க திண்டுக்கல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் டாக்டர் பிரதீப் அவர்களின் ஆணையின்படி பழனி காவல் துணை கண்காணிப்பாளர் தனஞ்ஜெயன் மற்றும் பழனி நகர காவல் ஆய்வாளர் மணிமாறன் அவர்கள் காவல்துறையினர் சார்பில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டு பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் மேற்கொண்டு கஞ்சா மற்றும் போதை பொருட்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்து வருகின்றனர் இந்த நிலையில் போதை பொருள் பயன்பாடு மற்றும் சட்டவிரோத கடத்தலுக்கும் எதிரான சர்வதேச தினத்தை முன்னிட்டு (ஜூன் 26) பழனி உட்கோட்ட அனைத்து காவல் நிலையங்களில் பணிபுரியும் காவல்துறையினர் மற்றும் பழனிஆண்டவர் கல்லூரி மாணவ மாணவிகளும் நூற்றுக்கு மேற்பட்டோர் கலந்துகொண்டு பழனி ஆண்டவர் கல்லூரியிலிருந்து பழனி பேருந்து நிலையம் மயில் ரவுண்டான வரை விழிப்புணர்வு ஏற்படுத்தியதுடன். போதைப் பொருள்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக முகாம் பேரணி நடைபெற்றது. மேலும் போதைப் பொருள்களுக்கு எதிரான உறுதிமொழி எடுக்கப்பட்டு பேரணியின் போது மாணவர்கள் கையில் போதை தடுப்பு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியும், போதைக்கு எதிராக கோஷங்களையும் எழுப்பி பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்த விழிப்புணர்வு பேரணியில் பழனிஆண்டவர் திருக்கோவிலின் துணை ஆணையர் வெங்கடேசன் தொடங்கி வைத்து கலந்து கொண்டார் மேலும் இந்த விழிப்புணர்வு பேரணியில் காவல்துறை அதிகாரிகளும் கல்லூரி பேராசிரியர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
✍️ பழனி பாலமுருகன்