Vijilence Network

Vijilence News

There is commotion in Erode District Collectorate

There is commotion in Erode District Collectorate..

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு..

ஈரோடு மாவட்டத்தில் செப்டம்பர் 7ஆம் தேதி ஸ்ரீ விநாயகர் சதுர்த்தி விழா இந்து மக்கள் கட்சி சார்பாக கோலாகலமாகவும் பிரம்மாண்டமாகவும் ஈரோடு மாவட்டம் முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. புதிய இடங்களுக்கு காவல்துறை பல கட்டுப்பாடுகளை விதிக்கிறது. விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் செல்லும் இந்து மக்கள் கட்சி நிர்வாகிகள் மீது மிரட்டி காவல்துறை வழக்கினை போட்டு மன உளைச்சலுக்கு ஆளாக்குகின்றனர். விநாயகர் சிலை வைப்பது கடும் குற்றமா?? என்று கூறி புதிய இடங்களில் ஈரோடு மாவட்டத்தில் ஸ்ரீ விநாயகர் சிலைகளைப் பிரதிஷ்டை செய்து இந்து மக்கள் கட்சிக்கும் பொதுமக்களுக்கும் புதிய இடங்களில் வைத்து வழிபட அனுமதி தரக்கோரியும் கட்டுப்பாடுகளைத் தளர்த்தி மாவட்ட ஆட்சித் தலைவர் குடும்பத்தோடு இந்து மக்கள் கட்சி நடத்தும் ஸ்ரீ விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் கலந்து கொள்ள மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மாநிலச் செயலாளர் க. சி. முருகேசன் தலைமையில் விநாயகரை தலையில் சுமந்து கொண்டு இந்து மக்கள் கட்சி மாநில மாவட்ட நகர நிர்வாகிகள், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுக்க வந்ததால் மிகப்பெரிய பரபரப்பு ஏற்பட்டது. சிலையோடு உள்ளே செல்ல காவல்துறையினர் அனுமதி மறுத்தனர். காவல்துறை இந்து மக்கள் கட்சி நிர்வாகிகளும் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து மாவட்ட ஆட்சித் தலைவரிடம் க.சி முருகேசன் மற்றும் நிர்வாகிகள் உள்ளே சென்று மனு அளித்தனர்.

✍️ கோபி குமார்

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *