Vijilence Network

Vijilence News

ஊராட்சி கிராம மக்கள் முற்றுகையிட்டு போராட்டம் :

ஊராட்சி கிராம மக்கள் முற்றுகையிட்டு போராட்டம் :

சத்தியமங்கலம் நகராட்சியுடன் கொமாரபாளையம் ஊராட்சியை இணைக்க கூடாது என்று சத்தியமங்கலம் வட்டாட்சியர் அலுவலகத்தில் கொமாரபாளையம் ஊராட்சி கிராம மக்கள் முற்றுகையிட்டு போராட்டம் :

 

சத்தியமங்கலம் நகராட்சியுடன் கொமாரபாளையம் ஊராட்சியை இணைக்க கூடாது என்று சத்தியமங்கலம் வட்டாட்சியர் அலுவலகத்தில் கொமாரபாளையம் ஊராட்சி கிராம மக்கள் முற்றுகையிட்டு போராட்டம்:- கொமாரபாளையம் ஊராட்சியை சத்தியமங்கலம் நகராட்சியுடன் இணைக்க கூடாது, அவ்வாறு இணைத்தால் 100 நாள் பணிகள் பரிபோய்விடும், மக்களின் வாழ்வாதாரம் பெரும் அளவில் பாதிக்கும், வரிகள் பல மடங்கு உயரும், மத்திய அரசின் சலுகைகள் ஏதும் கிடைக்காது, என கொமாரபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட அனைத்து பொதுமக்கள் மற்றும் 100 நாள் வேலை திட்ட பணியாளர்கள், வணிகர்கள், விவசாயிகள் பெருந்திரளாக சுமார் 2000க்கும் மேற்பட்டோர்கள் கலந்து கொண்டு கண்டன கோஷம் எழுப்பி, தரையில் அமர்ந்து தர்ணா செய்துபோராட்டம் நடத்தினர்,வருவாய் வட்டாட்சியர் திரு சக்திவேல், அவர்கள் மற்றும் காவல்துறை ஆய்வாளர் திரு செல்வராஜ்,அவர்கள் பேச்சுவார்த்தைக்கு அழைத்து கொமாரபாளையம் ஊராட்சி தொடர்ந்து ஊராட்சியாக செயல்பட ஈரோடு மாவட்ட நிர்வாகத்திற்கும், தமிழக அரசின் கவனத்திற்கும் கொண்டு செல்லப்படும் என்று உறுதி அளித்ததின் பேரில், பொதுமக்கள் தங்கள் போராட்டத்தை கைவிட்டு களைந்து சென்றனர், கொமாரபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் எஸ்.எம்.சரவணன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்த மாபெரும் ஆர்ப்பாட்டத்தில் திமுக மாவட்ட பிரதிநிதி ரமேஷ், முன்னிலை வகித்தார், முற்றுகைப் போராட்டத்தில் ஒன்றியகுழு உறுப்பினர், துணைத் தலைவர், அனைத்து ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள், முன்னாள் கூட்டுறவு சங்கத் தலைவர்கள்,மற்றும் அனைத்துக் கட்சி நிர்வாகிகளும் கட்சி பேதம் இன்றி மக்கள் நலனை முன்னிறுத்தி ஒருங்கிணைந்து இந்த முற்றுகைப் போராட்டத்தை நடத்தினார்கள்.

 

✍️ கோபி குமார்

 

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *