2026 ஆம் ஆண்டு முதல் சிபிஎஸ்சி பள்ளி 10ஆம் வகுப்புக்கு ஆண்டுக்கு இருமுறை பொதுத்தேர்வு..
2026 ஆம் ஆண்டு முதல் சிபிஎஸ்சி பள்ளி 10ஆம் வகுப்புக்கு ஆண்டுக்கு இருமுறை பொதுத்தேர்வு..
CBSE பள்ளி 10ஆம் வகுப்புக்கு ஆண்டுக்கு இருமுறை பொதுத்தேர்வுகள் நடத்த ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது. 2026ஆம் ஆண்டு முதல் இரண்டு முறை பொதுத் தேர்வு நடத்தப்பட உள்ளது. மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது.
இது தொடர்பாக CBSE தேர்வுக் கட்டுப்பாட்டு தலைவர் சன்யாம் பரத்வாஜ் 2026ஆம் ஆண்டு முதல் ஆண்டுக்கு இரண்டு முறை 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்துவதற்கான விதிமுறைகளை CBSE அங்கீகரித்துள்ளது எனத் தெரிவித்துள்ளார்.
முதல் கட்டத் தேர்வுகள் பிப்ரவரியிலும், இரண்டாம் கட்ட தேர்வுகள் மே மாதத்திலும் நடைபெறும். மேலும் மாணவர்களுக்கு இது கூடுதல் வாய்ப்பு வழங்கும் வகையில் இருக்கும். மேலும் முதல் கட்ட பொதுத்தேர்வு முடிவு ஏப்ரலிலும், இரண்டாம் கட்ட பொதுத்தேர்வு முடிவு ஜூனிலும் வெளியிடப்படும்.
அதோடு மட்டுமல்லாமல் மாணவர்கள் முதல் கட்டத் தேர்வில் கலந்து கொள்வது கட்டாயம் எனவும், இரண்டாம் கட்டத் தேர்வில் விருப்பமிருந்தால் கலந்து கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளார். மாணவர்கள் முதல் கட்ட பொதுத்தேர்வில் குறைவாக மதிப்பெண்கள் பெற்றிருந்தால் கூடுதல் மதிப்பெண்கள் பெற இரண்டாம் கட்ட பொதுத் தேர்வு அமையும். அதோட மட்டுமல்லாமல் மாணவர்கள் கணிதம், அறிவியல், சமூக அறிவியல், மொழிப்பாடம் ஆகியவற்றில் ஏதேனும் மூன்றில் தங்கள் மதிப்பெண்களை மேம்படுத்திக் கொள்ளவும் இந்த இரண்டாம் கட்ட பொதுத் தேர்வு உதவிகரமாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார். உள்மதிப்பீடு தேர்வு ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே நடத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
✍️ இணை ஆசிரியர் விஜிலென்ஸ்
DR.பா.தமிழ் பாரதி ஆனந்தன்