Accident on Sathyamangalam Thimpam Hill Pass, Erode District
Accident on Sathyamangalam Thimpam Hill Pass, Erode District
மாவட்டம் சத்தியமங்கலம் திம்பம் மலைப்பாதையில் சற்று முன்னர் மூன்றாவது கொண்டை ஊசி வலையில் சுற்றுலா வாகனம் விபத்து.
கோவை மாவட்டம் சூலூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் கர்நாடக மாநிலம் மாதேஸ்வரன் கோவிலுக்கு சென்று விட்டு திரும்பும் பொழுது விபத்து நேர்ந்துள்ளது. 20 பேர் பயணித்த அந்த வாகனத்தில் பதினோரு நபர்களுக்கு படுகாயமும், நான்கு நபர்களுக்கு லேசான காயங்களும் ஏற்பட்டுள்ளது. காயம் அடைந்தவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு சக்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
– ✍ பவானிசாகர் சட்டமன்றத் தொகுதி நிருபர் – N. குமார்