காவலர் தங்கும் விடுதியைத் திறந்து வைத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.R. ஸ்டாலின் IPS..
காவலர் தங்கும் விடுதியைத் திறந்து வைத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.R. ஸ்டாலின் IPS..
தமிழகத்தில் உள்ள அனைத்து காவலர்களும் கன்னியாகுமரிக்கு வருகை தரும்போது பயன்படுத்தும் வகையில் காவலர் தங்கும் விடுதியைத் திறந்து வைத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.R. ஸ்டாலின் IPS..
கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முயற்சியில் வெளிமாவட்டங்கள் மற்றும் உள்ளூர்களில் இருந்து அலுவல் நிமித்தமாக கன்னியாகுமரிக்கு வருகைத் தரும் காவலர்களுக்கு பயன்படும் வகையில் காவலர் தங்கும் விடுதி மாவட்ட காவல் கண்காணிப்பாளரால் திறந்து வைக்கப்பட்டது.
இந்த காவலர் ஓய்வு இல்லத்தில் காவலர்கள் தங்கி ஓய்வு எடுக்கும் வகையில் அறைகளில் படுக்கை வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனை தமிழகத்தில் உள்ள அனைத்து காவலர்களும் கன்னியாகுமரிக்கு வருகை தரும்போது பயன்படுத்திக் கொள்ள முடியும். இந்த வசதியைப் பயன்படுத்திக் கொள்ள 9498101905 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு காவலர்கள் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும்.
இந்நிகழ்வின் போது கன்னியாகுமரி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் மகேஷ் குமார், கன்னியாகுமரி காவல் நிலைய ஆய்வாளர் சரவணன், உதவி ஆய்வாளர் ரகு பாலாஜி மற்றும் காவலர்கள் உடனிருந்தனர்.
✍️ நிறுவனர் / வெளியீட்டாளர்/ஆசிரியர்
விஜிலென்ஸ் டாக்டர் ஆனந்தன் துரைராஜ்