Vijilence Network

Vijilence News

இந்திய கடற்படை மற்றும் இந்திய கடலோர காவல் படை

இந்திய கடற்படை மற்றும் இந்திய கடலோர காவல் படை.

தமிழ்நாடு முதலமைச்சர் அறிவிப்பின்படி மீனவ இளைஞர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் அவர்களின் வாரிசுகள் இந்திய கடற்படை மற்றும் இந்திய கடலோர காவல் படையில் சேர்வதற்காக கடலூர், இராமநாதபுரம் மற்றும் கன்னியாகுமரி ஆகிய 3 மையங்களில் 3 மாத கால இலவச பயிற்சி 8.7.2024 தேதி முதல் வகுப்புகளை தமிழ்நாடு கடலோர பாதுகாப்பு குழுமம் மூலம் நடத்தப்பட்டு வருகிறது. கடலூர் மாவட்டம் காவல் அலுவலம் கூட்ட அரங்கில் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இரா. இராஜாராம் TPS கலந்துகொண்டு பயிற்சியைத் துவக்கி வைத்து பேசுகையில், பயிற்சியில் பங்கேற்கும் இளைஞர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் தெரிவித்து, பயிற்சி பெறும் வாய்ப்பு உங்களுக்கு கிடைத்துள்ளது வாய்ப்பினை முழுமையாகவும், ஈடுபாட்டுடன் குழுவாக பயிற்சி மேற்கொள்ளும்போது
முதலில் ஒழுக்கத்தைக்
கற்றுக் கொள்ள முடியும் . உடல் வலிமைப் பெறும் திறன்மேம்பாடு அடையும். கட்டளை பிறப்பிக்கின்ற அதிகாரம் பெறுவதற்கு முதல் தகுதி கீழ்படிதல்
(Obey the order )ஆகும் எனவும் , பயிற்சி பெற்று சமுதாயத்தில் உயர்நிலையை அடைய வாழ்த்துக்கள் என வாழ்த்தி பேசினார். இந்நிகழ்ச்சியில்
மீன்வளத்துறை இணை இயக்குனர் வேல்முருகன், தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் செந்தில் விநாயகம், கடலோர பாதுகாப்பு குழுமம் காவல் ஆய்வாளர் பத்மா, உதவி ஆய்வாளர்கள் பிரபாகரன், கதிரவன்,
வெங்கடேசன் சக்திகணேஷ், ரமேஷ்
மற்றும்
பயிற்சியாளர்கள் பங்கேற்றனர். பயிற்சியில் 40 மீனவ இளைஞர்கள் பயிற்சி பெற உள்ளார்கள்.

✍️ கடலூர் வேலன்

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *