சாலை பாதுகாப்பு வேண்டி பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள்
சாலை பாதுகாப்பு வேண்டி பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள்..
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி, மாரியம்மன் கோயில் TO விஸ்வசாந்தி ஸ்கூல் செல்லும் சாலையில், பள்ளிச் செல்லும் மழலைச் செல்வங்களும், மாணவர்களும், ஆசிரியர்களும், பாதசாரிகளும், பெற்றோர்களும், பள்ளிப் பேருந்துகளும், காலையிலும், மாலையிலும் சென்று வருவதற்கு மிகவும் இடைஞ்சலாகவும், நடப்பதற்கு ஆபத்தாகவும் இருக்கிறது எனவும்,
வேறு வாகனங்கள் வந்தால், பள்ளிக் குழந்தைகள் நடப்பதற்கும், ஒதுங்குவதற்கும் கூட இடமில்லை என, மிகவும் அச்சத்துடன் கூறுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
எனவே இந்த ஆபத்தான, முக்கிய விஷயத்தை கருத்தில் கொண்டு, வேறு அசம்பாவிதங்கள் ஏற்படுவதற்கு முன்பு,
சம்பந்தப்பட்ட கோத்தகிரி போக்குவரத்து காவல் ஆய்வாளர், உதவி ஆய்வாளர் ஆகியோர், துரித நடவடிக்கை எடுத்து, உடனடியாக சரி செய்து கொடுக்க வேண்டும் என பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் வேண்டுகோள் வைத்துள்ளனர்.
ஆபத்தை உணர்ந்து, மாணவச் செல்வங்களுக்கும், பெற்றோர்களுக்கும், உடனடி பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கப்படுமா?..
✍️ நீலகிரி சிவகிருஷ்ணா.