பாப்பாரப்பட்டியில் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம்..

பாப்பாரப்பட்டியில் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம்..

தர்மபுரி மாவட்டம் பென்னாகரத்தை அடுத்த பாப்பாரப்பட்டியில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ மருத்துவ முகாம் இன்று நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் சதீஷ், பாராளுமன்ற உறுப்பினர் ஆ மணி ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில், 25 கர்ப்பினி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களையும், 92 பழங்குடியினர் மக்களுக்கு பழங்குடியினர் நலவாரிய அடையாள அட்டைகளையும், 06 காசநோயால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு அரசு நலத்திட்ட உதவிகளையும், 25 மருத்துவ பயனாளி மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டைகளையும், 10 நபர்களுக்கு கலைஞர் காப்பீடு திட்ட அட்டைகளையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.

மேலும் அவர் பேசும் போது இந்த முகாம்”நலம் காக்கும் ஸ்டாலின்” உயர் மருத்துவ சேவை முகாமில் பொது மருத்துவம், பொது அறுவை சிகிச்சை, எலும்பு முறிவு மருத்துவம், பேறுகால மருத்துவம், குழந்தை நல மருத்துவம், இதயநல சிறப்பு மருத்துவம், நரம்பியல் சிறப்பு மருத்துவம், நுரையீரல் சிறப்பு மருத்துவம், நீரிழிவு நோய்கான சிறப்பு மருத்துவம், தோல் சிறப்பு மருத்துவம், பல் மருத்துவம், கண் சிறப்பு மருத்துவம், காது மூக்கு தொண்டை மருத்துவம், மன நல மருத்துவம், இயன் முறை மருத்துவம், இயற்கை மருத்துவம், உளவியல் ஆலோசணை ஆகிய 17 சிறப்பு மருத்துவ சிகிச்சைகள், சிறப்பு மருத்துவ நிபுணர்களால் வழங்கப்படுகிறது.

இம்முகாமில் தலைசிறந்த மருத்துவ நிபுணர்களால் பரிசோதனை செய்து சிகிச்சை மற்றும் மருந்துகள் இலவசமாக வழங்கப்படும். மேலும், பல்வேறு மருத்துவ முகாம்களின் மூலம் நோயாளிகளை பரிசோதித்து சிறப்பு மருத்தவ சிகிச்சை தேவைப்படும் நோயாளிகளுக்கு நலம் காக்கும் ஸ்டாலின் பல்நோக்கு மருத்துவ முகாமில் கலந்து கொள்ள செய்து, பயனடைய மருத்துவ குழு மூலம் ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். அனைத்து பொதுமக்களும் ”நலம் காக்கும் ஸ்டாலின்” உயர் மருத்துவ சேவை முகாமில் கலந்து கொண்டு பயனடையுமாறு கேட்டுக்கொண்டார். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரெ.சதீஸ், தெரிவித்தார். முன்னதாக முகாமில் கலந்துகொண்ட பொதுமக்களிடம் நோய் கண்டறிய சோதனை மேற்கொண்ட பொதுமக்களிடம் நோய் குறித்து கேட்டறிந்து அவர்களுக்கு தேவையான சிகிச்சை அளிக்க டாக்டர்களிடம் அறிவுறுத்தினார் மேலும் விபத்து ஏற்பட்டு காரில் படுத்துக் கொண்டிருந்த நோயாளியிடம் அங்கேயே சென்ற மாவட்ட ஆட்சியர் அவருக்கு தேவையான உதவித்தொகை மாதம் 2000 ரூபாய் வழங்க அறிவுறுத்தினார்.

இந்த நிகழ்ச்சியில் பாராளுமன்ற உறுப்பினர் ஆ மணி இணை இயக்குனர் மாவட்ட சுகாதார அலுவலர் ராஜேந்திரன், துணை இயக்குனர் காச நோய் பாலசுப்பிரமணியம், பென்னாகரம் தலைமை மருத்துவமனை முதன்மை மருத்துவர் கனிமொழி, வட்டார மருத்துவ அலுவலர்கள் ஜெயச்சந்திரபாபு, சுகாதார ஆய்வாளர்கள், செவிலியர்கள், கிராமப்புற செவிலியர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

✍️ தர்மபுரி மாவட்ட நிருபர் முனுசாமி

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *