செங்கம் அருகே வாரிசுச் சான்றிதழ் வழங்குவதற்காக 1000 ரூபாய் லஞ்சம் பெற்ற பெண் வருவாய் ஆய்வாளர் கைது..
செங்கம் அருகே வாரிசு சான்றிதழ் வழங்குவதற்காக 1000 ரூபாய் லஞ்சம் பெற்ற பெண் வருவாய்ஆய்வாளர் கைது..
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த இறையூர் பகுதியில்
பெண் வருவாய் ஆய்வாளராகப் பணிபுரிந்த பாரதி என்பவரிடம் மேல் நாச்சி பட்டு பகுதியைச் சேர்ந்த பழனிசாமி என்ற முதியவரிடம்
வாரிசு சான்றிதழ் வழங்குவதற்காக 1000 ரூபாய் லஞ்சம் கேட்ட நிலையில், விவசாயி திருவண்ணாமலை லஞ்ச ஒழிப்புத் துறையினருக்கு தகவல் அளித்ததன் பேரில் லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி வேல்முருகன் தலைமையில் கோபிநாத் குழுவினர் ரசாயனம் கலந்த நோட்டுகளை விவசாயிடம் கொடுத்து பெண் வருவாய் ஆய்வாளரிடம் கொடுத்தபோது லஞ்ச ஒழிப்புத் துறையினரால் கையும் களவுமாகப் பிடிபட்டார்.
இதனை அடுத்து லஞ்ச ஒழிப்புத் துறையினர் கைது செய்து வட்டாட்சியர் அலுவலகத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்..
✍️ஆம்பூர் பாலாஜி