சைபர் கிரைம் போலீசார் மூலம் விழிப்புணர்வு..
சைபர் கிரைம் போலீசார் மூலம் விழிப்புணர்வு..
கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜாராம் அறிவுறுத்தலின் படியும் கடலூர் மாவட்ட சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பிரபாகரன் தலைமையில் சைபர் கிரைம் பற்றிய விழிப்புணர் குறிஞ்சிப்பாடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பூதம்பாடி கிராமத்தில் போலீசருக்கும் பொதுமக்களுக்கும் இடையே உள்ள நல்லுறவை மேம்படுத்தும் வகையில் அங்கு வந்த பொது மக்களுக்கு சைபர் கிரைம் பற்றி விழிப்புணர்வு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பிரபாகரன் தலைமையில் நடைபெற்றது. போலீசாரால் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டு இணைய வழி குற்றம் பற்றி விளக்கப்பட்டது. குற்றங்கள் குறித்தும், சமூக வலைதளங்களில் நடைபெறும் குற்றங்கள், போலியான App களில் பெறும் கடன்கள், போலி வேலை வாய்ப்பு குற்றங்கள், வங்கி கணக்குகளில் நடைபெறும் மோசடிகள் குறித்து சைபர் கிரைம் போலீசார் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
✍️கடலூர் வேலன்