Vijilence Network

Vijilence News

16 வகையான பூச்சி இனங்களை உணவாக பயன்படுத்த சிங்கப்பூர் அரசு அனுமதி..

16 வகையான பூச்சி இனங்களை உணவாக பயன்படுத்த சிங்கப்பூர் அரசு அனுமதி..

16 வகையான பூச்சி இனங்களை உணவாக பயன்படுத்த சிங்கப்பூர் அரசு அனுமதி.

பட்டுப்புழு, வெட்டுக்கிளிகள், உணவு புழுக்கள், என 16 வகையான பூச்சி இனங்களை உணவாக பயன்படுத்திக் கொள்ள சிங்கப்பூர் அரசு அனுமதி வழங்கி உள்ளது.

இது தொடர்பாக சிங்கப்பூர் உணவுத்துறை ஆணையம் வெளியிட்ட உத்தரவில், பூச்சிகள் மற்றும் பூச்சி இனங்களை இறக்குமதி செய்து கொள்ள உடனடியாக அனுமதி வழங்கப்படுகிறது.

இவற்றை மனிதர்கள் நுகர்வுக்கு மற்றும் உணவு உற்பத்தி செய்யும் விலங்குகளுக்கு தீவனமாக பயன்படுத்தலாம். அவ்வாறு இறக்குமதி செய்யப்படும் பூச்சிகள் உணவு பாதுகாப்பு விதிமுறைகளை பயன்படுத்தி கொள்ள வேண்டும். காடுகளில் வாழும் பூச்சிகளை உணவாக பயன்படுத்தக்கூடாது.

பண்ணைகளில் வளர்க்கும் பூச்சிகள் மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட பூச்சிகளை மட்டுமே சமையலுக்கு பயன்படுத்த வேண்டும் எனக்கூறப்பட்டு உள்ளது.

இதனையடுத்து அந்நாட்டு உணவகங்கள், வாடிக்கையாளர்களை கவர பூச்சிகளை கொண்ட உணவுகளை தயாரிக்க தயாராகிவிட்டன. இதற்காக சீனா, தாய்லாந்து, வியட்நாம் உள்ளிட்ட நாடுகளில் உள்ள பூச்சி பண்ணைகளில் இருந்து பூச்சிகளை இறக்குமதி செய்ய உள்ளன.

– ✍️ ஆசிரியர்

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *